கோப்பாய் உப அலுவலக எல்லைக்குட்பட்ட “அம்மாச்சி” உணவகமானது கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

உரும்பிராய் உப அலுவலகத்திற்கு உட்பட்ட மக்களின் வசதி கருதி எதிர்வரும் 2024.05.11ஆம் திகதி சனிக்கிழமை, உரும்பிராய் கிழக்கு காந்திஜி சனசமூகநிலையத்தில், நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உரும்பிராய் உப அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் வசதி கருதி எதிர்வரும் 2024.05.11ஆம் திகதி சனிக்கிழமை, உரும்பிராய் கிழக்கு காந்திஜி சனசமூகநிலையத்தில், நடமாடும் சேவை நடைபெறவுள்ளது. குறித்த நடமாடும் சேவையில் பின்வரும் சேவைகள் நடைபெறவுள்ளன. • ஆதனவரி அறவீடு • ஆதனப் பெயர்மாற்றம், கட்டட விண்ணப்பங்கள் தொடர்பான சேவைகள் • வியாபார உரிமம், வரி அறவீடுகள், புதிய வியாபார நிலையங்களை பதிவுசெய்தல், • நடமாடும் நூலக சேவை (நூல்கள் இரவல் வழங்கல், புதிய அங்கத்தவர்களை இணைத்தல்) • ஆயுள்வேத வைத்திய சேவை – பொதுமக்கள் வைத்திய சேவையில் பங்குபற்றி இலவசமாக மருத்துவ ஆலோசனை, மற்றும் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம்.) • வீதி மின்விளக்குகள் திருத்துதல்;, முறைப்பாடுகள் • கழிவகற்றல் சேவை • துவிச்சக்கரவண்டி உரிமம் • வளர்ப்பு நாய்களை பதிவு செய்தல்.

கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் FARM TO GATE இணைய செயலி 22.03.2024 அன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக வடிவமைக்கப்பட்டு யாழ்ப்பாணம் ஒட்டகப்புலம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வின் போது இந்த இணைய செயலி மக்கள் மயப்படுத்தப்பட்டது. இவ் இணைய செயலியை பயன்படுத்த www.farmtogate.org எனும் முகவரிக்குள் உள்நுழைந்து பயன்படுத்தலாம் .

வடக்குமாகாண 34 உள்ளுராட்சி மன்றங்களுக்குமான இணையத்தளங்களினை வெளியிடும் நிகழ்வு 01.03.2024 ம் திகதி நடைபெற்றது.

வடக்குமாகாண 34 உள்ளுராட்சி மன்றங்களுக்குமான இணையத்தளங்களினை கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால் வைபவரீதியாக வெளியிடும் நிகழ்வானது 01.03.2024ஆந் திகதியன்று பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ ஆளுநர், வடமாகாண பிரதம செயலாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், UNDP-CDLG திட்ட முகாமையாளர், மாகாண இறைவரி ஆணையாளர், உள்ளுராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர்கள், சபையின் செயலாளர்கள், இணையத்தள வடிவமைப்பில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளுராட்சி திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.  

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 29.02.2023 ம் திகதி வெகு சிறப்பாக நடைபெற்றது

நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்கில் வலிகாமம் கிழக்கு பிரதேசசபையினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இருந்து  கற்றல் உபகரணங்கள் வழங்கப்படவுள்ள 370 பாடசாலை மாணவர்களில் முதற்கட்டமாக 52  பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கௌரவ ஆளுனரின் வருகையுடன் சென் தெரசா மகளிர் கல்லூரியில் 29.02.2024 ம் திகதி வெகு சிறப்பாக நடைபெற்றது      

கௌரவ ஆளுனருடனான பொது அமைப்புக்கள், பொது மக்கள் குறைகேள் நிகழ்வு 29.02.2024 வியாழக்கிழமை நடைபெற்றது.

அச்சுவேலி உப அலுவலக பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கௌரவ ஆளுனருடனான பொது அமைப்புக்கள் மற்றும் சனசமூக நிலையங்கள் உடனான பொது மக்கள் குறைகேள் நிகழ்வு 29.02.2024 வியாழக்கிழமை 4.30 மணிக்கு அச்சுவேலி செந்திரேச மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.  

வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட முதியோருக்கு படுக்கை வசதிகள் வழங்குதல்

வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட முதியோருக்கு படுக்கை வசதிகள் வழங்கப்பட்டது. அதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

 

 

                                

ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் 2024.02.03

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வும், பிரியாவிடை நிகழ்வும் 2024.02.03 ஆந் திகதி பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் விசேடமாக அமைக்கப்பட் ட பந்தலில் சிறப்பாக நடைபெற்ற தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

LAPDP கலந்துரையாடல்வட்டார ரீதியில் நடைபெற்ற தருணம்.

LAPDP கலந்துரையாடல் எமது சபையின் 22 வட்டாரங்களிலும் வட்டார ரீதியில் வெற்றிகரமாக மக்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. அதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்