வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உரும்பிராய் உப அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் வசதி கருதி எதிர்வரும் 2024.05.11ஆம் திகதி சனிக்கிழமை, உரும்பிராய் கிழக்கு காந்திஜி சனசமூகநிலையத்தில், நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.
குறித்த நடமாடும் சேவையில் பின்வரும் சேவைகள் நடைபெறவுள்ளன.
• ஆதனவரி அறவீடு
• ஆதனப் பெயர்மாற்றம், கட்டட விண்ணப்பங்கள் தொடர்பான சேவைகள்
• வியாபார உரிமம், வரி அறவீடுகள், புதிய வியாபார நிலையங்களை பதிவுசெய்தல்,
• நடமாடும் நூலக சேவை (நூல்கள் இரவல் வழங்கல், புதிய அங்கத்தவர்களை இணைத்தல்)
• ஆயுள்வேத வைத்திய சேவை – பொதுமக்கள் வைத்திய சேவையில் பங்குபற்றி இலவசமாக மருத்துவ ஆலோசனை, மற்றும் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம்.)
• வீதி மின்விளக்குகள் திருத்துதல்;, முறைப்பாடுகள்
• கழிவகற்றல் சேவை
• துவிச்சக்கரவண்டி உரிமம்
• வளர்ப்பு நாய்களை பதிவு செய்தல்.