கோப்பாய் உப அலுவலக எல்லைக்குட்பட்ட “அம்மாச்சி” உணவகமானது கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

உரும்பிராய் உப அலுவலகத்திற்கு உட்பட்ட மக்களின் வசதி கருதி எதிர்வரும் 2024.05.11ஆம் திகதி சனிக்கிழமை, உரும்பிராய் கிழக்கு காந்திஜி சனசமூகநிலையத்தில், நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உரும்பிராய் உப அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் வசதி கருதி எதிர்வரும் 2024.05.11ஆம் திகதி சனிக்கிழமை, உரும்பிராய் கிழக்கு காந்திஜி சனசமூகநிலையத்தில், நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.

குறித்த நடமாடும் சேவையில் பின்வரும் சேவைகள் நடைபெறவுள்ளன.

• ஆதனவரி அறவீடு
• ஆதனப் பெயர்மாற்றம், கட்டட விண்ணப்பங்கள் தொடர்பான சேவைகள்
• வியாபார உரிமம், வரி அறவீடுகள், புதிய வியாபார நிலையங்களை பதிவுசெய்தல்,
• நடமாடும் நூலக சேவை (நூல்கள் இரவல் வழங்கல், புதிய அங்கத்தவர்களை இணைத்தல்)
• ஆயுள்வேத வைத்திய சேவை – பொதுமக்கள் வைத்திய சேவையில் பங்குபற்றி இலவசமாக மருத்துவ ஆலோசனை, மற்றும் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம்.)
• வீதி மின்விளக்குகள் திருத்துதல்;, முறைப்பாடுகள்
• கழிவகற்றல் சேவை
• துவிச்சக்கரவண்டி உரிமம்
• வளர்ப்பு நாய்களை பதிவு செய்தல்.