பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 29.02.2023 ம் திகதி வெகு சிறப்பாக நடைபெற்றது

நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்கில் வலிகாமம் கிழக்கு பிரதேசசபையினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இருந்து  கற்றல் உபகரணங்கள் வழங்கப்படவுள்ள 370 பாடசாலை மாணவர்களில் முதற்கட்டமாக 52  பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கௌரவ ஆளுனரின் வருகையுடன் சென் தெரசா மகளிர் கல்லூரியில் 29.02.2024 ம் திகதி வெகு சிறப்பாக நடைபெற்றது      

கௌரவ ஆளுனருடனான பொது அமைப்புக்கள், பொது மக்கள் குறைகேள் நிகழ்வு 29.02.2024 வியாழக்கிழமை நடைபெற்றது.

அச்சுவேலி உப அலுவலக பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கௌரவ ஆளுனருடனான பொது அமைப்புக்கள் மற்றும் சனசமூக நிலையங்கள் உடனான பொது மக்கள் குறைகேள் நிகழ்வு 29.02.2024 வியாழக்கிழமை 4.30 மணிக்கு அச்சுவேலி செந்திரேச மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.  

வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட முதியோருக்கு படுக்கை வசதிகள் வழங்குதல்

வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட முதியோருக்கு படுக்கை வசதிகள் வழங்கப்பட்டது. அதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

 

 

                                

ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் 2024.02.03

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வும், பிரியாவிடை நிகழ்வும் 2024.02.03 ஆந் திகதி பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் விசேடமாக அமைக்கப்பட் ட பந்தலில் சிறப்பாக நடைபெற்ற தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

LAPDP கலந்துரையாடல்வட்டார ரீதியில் நடைபெற்ற தருணம்.

LAPDP கலந்துரையாடல் எமது சபையின் 22 வட்டாரங்களிலும் வட்டார ரீதியில் வெற்றிகரமாக மக்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. அதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

 

 

அம்மாச்சி உணவகம் கோப்பாய் சந்திக்கு அருகாமையில் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.