எமது சபையின் நூலகங்கள் மற்றும் சேவைகள்

 

நூலகத்தின் சேவைகளைப் பெற்றுக் கொள்ள உரித்துடையர்

வாசகர்கள் ரூபா 100.00 ஐ செலுத்தி வாசகர் அட்டையினைப் பெறும் ஒருவர் தனது வாழ் நாழ் முழுவதும் நூலகத்தின் சேவைகளைப் பெற்றுக் கொள்ள உரித்துடையவராகின்றார்.

 

இரவல் வழங்கும் பகுதி

ரூபா 200.00 ஐ செலுத்தி விண்ணப்ப படிவம் ஒன்றினைப் பெற்று இதனைப் பூர்த்தி செய்து ரூபா 100.00 ஐ அங்கத்துவ பணமாகவும், 100.00 ஐ வைப்புப் பணமாகவும் செலுத்துவதன் மூலம் ஒருவர் இரவல் வழங்கும் பகுதியில் இருந்து இரு நூல்கள் இரவலாகப் பெற முடியும். எனினும் விண்ணப்பதாரர் ஒருவருக்கு சபை எல்லைக்குட்பட்ட ஆதன உரிமையாளர் ஒருவர் பிணையாக ஒப்பமிடுதல் வேண்டும். இவர் தனது ஆதனத்திற்கான வரியினை நிலுவையின்றிச் செலுத்தியிருத்தல் வேண்டும்.

 

உடன் உதவும் பகுதி

இப்பகுதியில் உள்ள நூல்களை வாசகர் அட்டை பெற்றுக் கொண்ட  ஒவ்வொருவரும் நூலகத்தில் வைத்துப் பாவிப்பதற்கு அனுமதிக்கப்படுவர்.

 

வாசிப்புப் பகுதி

வாசகர் அட்டையினைப் பெற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் நூலகத்தின் வாசிப்புப் பகுதியிலுள்ள பத்திரிகைகள்இ சஞ்சிகைகள் போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.

 

சிறுவர் பகுதி

நூலகத்தின் சிறுவர் பகுதியிலுள்ள நூல்களை நூலகத்தில் வைத்து சிறுவர்கள் ஒவ்வொருவரும் பாவிப்பதற்கு அனுமதிக்கப்படுவர். மேலும் உரிய முறையில் சிறுவர் பகுதியில் அங்கத்துவத்தைப் பெறுவதன் மூலம் வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்க அனுமதிக்கப்படுவர்.

atchuvely