எம்மைப் பற்றி ..........
1987ம் ஆண்டு 15ம் இலக்க பிரதேச சபை சட்டத்திற்கு அமைவாக ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தலைமை அலுவலகத்தின் கீழ் அச்சுவேலி, புத்தூர், நீர்வேலி, கோப்பாய், உரும்பிராய் ஆகிய ஐந்து உப அலுவலக நிர்வாக பிரதேசங்களை உள்ளடக்கி தனக்கேயுரிய பணிகளை தனித்துவமாக சிறப்புடன் ஆற்றி வருகின்றது. 102.2 சதுர கிலோ மீற்றர் நிர்வாகப்பரப்பை உள்ளடக்கி 31 கிராம அலுவலர் பிரிவுகளை தன்னகத்தே கொண்டமைந்துள்ள எமது பிரதேச சபையில் தற்போது வசித்து வரும் மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 76972 ஆகும். பிரதேச மக்களின் சுக வாழ்வினையும் மேம்பாட்டினையும் கருத்தில் கொண்டு சமூக, பொருளாதார, சுகாதார, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி மூலதன செயற்பாடுகளை எமது பிரதேச சபை சிறப்புடன் செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
