உள்ளுராட்சி அதிகாரப் பகுதியில் உள்ள மக்களின் நலனுக்காக சாதாரண தொகையை விட அதிகமாக குடிநீர் தேவைகள் இருக்கின்ற போதும் அல்லது பிற விசேட நோக்கங்களுக்காக தண்ணீர் தேவைப்படும் போதும்இ பவுசர் மூலம் தேவையான அளவு தண்ணீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனை ஒரு பொதுப் பயன்பாட்டுச் சேவையாகக் கருதி நீரை வழங்குவதற்கும், கட்டணம் வசூலிப்பதற்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது.

இந்த சேவைக்கான வீடியோ கிளிப்ஸ் பார்வையிட அருகில் சொடுக்குக👉.

செயல்முறை

⭐விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து சமர்ப்பித்தல் வேண்டும்.
⭐முற்கூட்டியே கட்டணத்தை முழுமையாக செலுத்துதல்.
⭐ நீர் விநியோகத்தினை பெற்றுக்கொள்ளுதல்.

சமர்ப்பிக்கவேண்டிய ஆவணம்
⭐சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்

மேலதிக தொடர்புகளுக்கு

முன் அலுவலக உத்தியோகத்தர்   ☎️021 221

நீர் பவுசர் சாரதி   ☎️021 221

தொழிநுட்ப உத்தியோகத்தர்  ☎️ 021

கால எல்லை   01 நாள்

கட்டணம்   1 குடிநீர் தேவைக்கு 1லீற்றர் கட்டணம் ரூ.1.50
2. விசேட தேவைகளுக்கு  1லீற்றர் கட்டணம் ரூ.2.00